‘நானே வருவேன்’- புதிய அப்டேட்

செல்வராகவன் – தனுஷின் ‘நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்க இருக்கிறது. ஜவஹர் மித்ரனின் ‘திருச்சிற்றம்பலம்’, கார்த்திக் நரேனின் ’மாறன்’ படங்களில் நடித்து வரும் தனுஷ் செல்வராகவனின் ‘நானே வருவேன்’ படத்தில் நடிக்கவிருப்பதாய்…

செல்வராகவன் – தனுஷின் ‘நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்க இருக்கிறது.

ஜவஹர் மித்ரனின் ‘திருச்சிற்றம்பலம்’, கார்த்திக் நரேனின் ’மாறன்’ படங்களில் நடித்து வரும் தனுஷ் செல்வராகவனின் ‘நானே வருவேன்’ படத்தில் நடிக்கவிருப்பதாய் அறிவித்திருந்தார். இப்படத்தின், ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியானது. படப்பிடிப்பும் கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி தொடங்குவதாக செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். ஆனால், அப்போது படபிடிப்பு தொடங்கவில்லை. தனுஷின் கால்சீட் கிடைக்காததாலும், சாணிக் காயிதம் மற்றும் பீஸ்ட் படங்களில் செல்வராகவன் பிசியாக நடித்து வந்ததாலும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போனது.


இந்நிலையில் நாளை படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கவுள்ள நிலையில், அரவிந்த் கிருஷ்ணா படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்ளவுள்ளார். மேலும் கலைப்புலி எஸ் தாணு படத்தை தயாரிக்கவுள்ளார். புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்களில் தனுஷ் -செல்வராகவன் கூட்டணி சிறப்பாக அமைந்த நிலையில் தற்போது நானே வருவேன் படத்திற்கும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.