முக்கியச் செய்திகள் தமிழகம்

அப்துல்கலாம் பிறந்தநாள்: நினைவுகளை பகிரும் நெட்டிசன்கள்

இன்று அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு சமூகவலைதளங்களில் அவரைப்பற்றிய நினைவுகளை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். சாதனை நாயகன் அப்துல்கலாம் பற்றிய ஒரு சிறு குறிப்பு.

1931-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15-ம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரத்தில் பிறந்தார். அப்துல் கலாம், ராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் சராசரி மாணவராகவே காணப்பட்டார்.

பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சியிலுள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பயின்றார். 1954-ம் ஆண்டு, இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்தவர், விண்வெளி பொறியியல் பட்டத்தை சென்னை எம்.ஐ.டி-யில் பெற்றார்.

1960 ஆம் ஆண்டு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் (DRDO) விஞ்ஞானியாக இணைந்தார் அப்துல் கலாம். ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப் பணிகளைத் தொடர்ந்தார். துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்ததில் கலாமின் பங்கு முதன்மையானது. இதற்காக மத்திய அரசு கலாமுக்கு 1981 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கியது.

1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்து வந்தார். 1999 ஆம் ஆண்டில் பொக்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கிய பங்காற்றியுள்ளார். ஐந்து ஏவுகணை திட்டங்களில் இன்றியமையாத பங்காற்றியுள்ளார். ஜூலை 27, 2015 ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் மேடையில் உரையாற்றிக்கொண்டிருந்தபோதே மயக்கமடைந்து விழுந்து காலமானார் ஏவுகனை நாயகர் அப்துல் கலாம்.

 

காலாம் பெற்ற விருதுகள்

1981 – பத்ம பூஷன்

1990 – பத்ம விபூஷன்

1997 – பாரத ரத்னா

1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது

1998 – வீர் சாவர்கர் விருது

2000 – ராமானுஜன் விருது

Advertisement:
SHARE

Related posts

இந்திய அணி பேட்டிங்: வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு, முதல் பந்தில் பிருத்வி ஷா அவுட்!

Gayathri Venkatesan

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு பொறுப்பேற்றார்

Ezhilarasan

போயஸ் கார்டனில் கட்டப்பட்டுவரும் இல்லத்தை சசிகலா பார்வையிட்டார்

Gayathri Venkatesan