முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

கொரோனா: ஒரே நாளில் 19,391 பேர் டிஸ்சார்ஜ், 379 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் புதிதாக 16,862 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா 2வது அலையின் பாதிப்புகள் கடந்த சில நாட்களாக குறைந்து வருகின்றன. சில நாட்களாக, 18 ஆயிரத்தை தாண்டி இருந்த தொற்று 15 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்து வந்தது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ,16,862 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து நாடு முழுவதும் மொத்த கொரோனா பாதிப்பு 3,40,37,592 ஆக அதிகரித்துள் ளது. ஒரே நாளில், 19,391 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 33 லட்சத்து 82 ஆயிரத்து 100 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 379 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,51,814 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 97,14,38,553 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 30,26,483 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

பழனி ரோப் கார் காலதாமதம் ஆனதற்கு கடந்த அதிமுக அரசே காரணம்: அமைச்சர் சேகர்பாபு

Vandhana

ஜெயலலிதா இல்லத்தை பார்வையிட விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு: உயர் நீதிமன்றம்

Ezhilarasan

த.மா.காவின் துணைத்தலைவர் ஞானதேசிகனின் உடல் தகனம்!

Jeba Arul Robinson