சென்னையில் சிறுவன் கண்ணெதிரே அவரது விலைஉயர்ந்த சைக்கிளை மர்ம நபர் திருடிச்சென்றுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், உடனடியாக சைக்கிளை மீட்டு சிறுவனிடம் போலீசார் நேரில் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புரசைவாக்கம் ஹைரோடு பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் சிறுவனின் விலைஉயர்ந்த சைக்கிளை, இளைஞர் ஒருவர் திருடி சென்றுள்ளார். இதனை கண்ட சிறுவன், திருடனை விரட்டிச் சென்ற போதும், அவரால் பிடிக்கமுடியவில்லை. தனது கண்ணெதிரே சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர் குறித்து, சிறுவன் கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறை துணை ஆணையர் கார்த்திகேயன், அப்பகுதி சிசிடிவி காட்சியை கைப்பற்றி திருடனை உடனடியாக கண்டுபிடிக்கும்படி உத்தரவிட்டார்.
அண்மைச் செய்தி: உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல்: முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது
இதனையடுத்து திருடனை கண்டுபிடித்த போலீசார், சிறுவனின் சைக்கிளை மீட்டனர். இதனையறிந்த கீழ்பாக்கம் காவல்துறை துணை ஆணையர் கார்த்திகேயன், சிறுவனின் வீட்டிற்கு நேரடியாக சென்று, சைக்கிளை ஒப்ப்டைத்தார். தனது சைக்கிளை உடனடியாக கண்டுபிடித்த போலீசாருக்கு சிறுவன் நன்றி தெரிவித்தார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








