இந்தியாவில் புதிதாக 67,084 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவில் புதிதாக 67,084 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் தினசரி பாதிக்கப்படுவர்களின் விகிதம் 4.44% உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 67,882 பேர் குணமடைந்திருப்பதாகவும், 1,241 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அண்மைச் செய்தி: உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல்: முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது
தற்போது 7,90,789 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை, இதுவரை 5,06,520 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது. நாட்டில், இதுவரை 171,28,19,947 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டிருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








