நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் கடன் சுமை காரணமாக 16 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொண்டதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய், மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில், கடந்த 2018-ஆம் ஆண்டு, கடன் சுமை அல்லது தொழில் நசிவு காரணமாக 4,970 பேர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே காரணத்திற்காக கடந்த 2019-ஆம் ஆண்டில் 5,908 பேரும், 2020ம் ஆண்டில் 5,213 பேரும் தற்கொலை செய்து கொண்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அண்மைச் செய்தி: உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல்: முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.
இதேபோல் வேலையின்மை காரணமாக 2018-ஆம் ஆண்டு 2,741 பேரும், 2019-ஆம் ஆண்டு 2,851 பேரும், 2020-ஆம் ஆண்டு 3,548 பேரும் தற்கொலை செய்து கொண்டதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் தெரிவித்துள்ளார். கடன் சுமை மற்றும் வேலையின்மை காரணமாக கடந்த 3 ஆண்டுகளில் 25 ஆயிரத்து 140 பேர் தற்கொலை செய்து கொண்டிருப்பது மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








