தனியார் பள்ளி பெண் ஊழியர் வீட்டில் 43பவுன் நகை திருடிய மர்ம நபர்கள்!

ஈரோட்டில் தனியார் பள்ளி பெண் ஊழியர் வீட்டில் மர்மநபர்கள் பூட்டை உடைத்து 43 பவுன் நகை மற்றும் 10,000 ரொக்கப் பணம் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு கதிரம்பட்டி நஞ்சனாபுரம் ஆர்.கே.கார்டன் பகுதியை…

ஈரோட்டில் தனியார் பள்ளி பெண் ஊழியர் வீட்டில் மர்மநபர்கள் பூட்டை உடைத்து 43 பவுன் நகை மற்றும் 10,000 ரொக்கப் பணம் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு கதிரம்பட்டி நஞ்சனாபுரம் ஆர்.கே.கார்டன் பகுதியை சேர்ந்தவர் சங்கர்
இவரது மனைவி கவிதா. சங்கர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.
கவிதா தனியார் பள்ளியில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். கவிதாவிற்கு
ஓவியா என்ற திருமணமான மகள் உள்ளார்.இந்த நிலையில் கடந்த 25ம் தேதி கவிதா
வீட்டை பூட்டி விட்டு, கோவையில் உள்ள தனது மகளை பார்க்க சென்று விட்டு
கோவையில் இருந்து கவிதா ஈரோட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு
உடைக்கப்பட்டு வீட்டின் பீரோவுக்குள் இருந்த 43 பவுன் நகைகளை மர்ம நபர்கள்
கொள்ளையடித்து சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதனைத் தொடர்ந்து
போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து தாலுக்கா போலீசார் கவிதாவின்
வீட்டிற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைத்து வீட்டில் பதிவான மர்மநபர்களின்
கைரேகைகள் மற்றும் தடயங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.