ஆப்பிள் -1 கம்ப்யூட்டருக்காக அதன் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் கையால் எழுதப்பட்ட விளம்பரம், சுமார் ரூ. 1.4 கோடிக்கு ஏலம் போனது.
1973-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் நிரப்பிய வேலை விண்ணப்பம் கடந்த மாதம் சுமார் ரூ. 2.5 கோடிக்கு ஏலம் போனது. நண்பர் ஸ்டீவ் வோஸ்னியாக்குடன் இணைந்து ஆப்பிள் நிறுவனத்தை தொடங்குவதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு அவர் வேலைக்கு விண்ணப்பித்தார். அவர் 18 வயதில் பணிக்கு சேர்ந்தார். மேலும் அது அவரது வாழ்நாளில் நிரப்பப்பட்ட வேலைக்கான ஒரே விண்ணப்பம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆப்பிள் 1 கணினிக்காக நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் கையால் விளம்பரம் எழுதியுள்ளார். இந்த விளம்பரம் ஆப்பிளின் ஆரம்ப நாட்களையும், தொழில்நுட்ப புரட்சியைத் தூண்டிய ஸ்டீவ் ஜாப்ஸின் தொலைநோக்குப் பார்வை நுண்ணறிவை விளக்கும் வகையில் உள்ளது.
மேலும் கணினிக்கான மின்சாரம் (power supply) 8K பைட்ஸ் ராம், வீடியோ, ஆடியோ அவட் புட், மைக்ரோ புராசஸர் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அந்த விளம்பரத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.
1976-ம் ஆண்டில் கருப்பு மையில் 8.5 x 11 பைண்டர் ஷீட்டில் ஆப்பிள்-1 கணினிக்காக எழுதப்பபட்ட இந்த குறிப்பிட்ட விளம்பரத்தைப் பற்றி விவாதிக்கும் வலைப்பதிவையும் ஏல நிறுவனம் வெளியிட்டது. இந்த விளம்பரம் பாஸ்டனை சேர்ந்த நிறுவனத்தில் ஏலம் விடப்பட்டது. அது , சுமார் ரூ. 1.4 கோடிக்கு ஏலம் போனது.







