வேலூர் அருகே, துப்பாக்கியுடன் திரிந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியை அடுத்த மத்தூர் பகுதியில், வேகமாக சென்ற கார் ஒன்று, சாலையில் சென்றவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் காரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட அஜீஸ் என்ற நபரிடம் விசாரணை நடத்திய போலீசார், அவர் சென்ற காரை சோதனை செய்தபோது, வெவ்வேறு மாநில பதிவெண் கொண்ட 4 நம்பர் பிளேட்டுகள் இருந்தது தெரியவந்தது. மேலும், காரில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் பரப்புரை மேற்கொண்ட நிலையில், அங்கு ஒருவர் துப்பாக்கியுடன் பிடிபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







