செய்திகள்

வங்கியில் பணம், நகை எடுப்பவர்களை பின் தொடர்ந்து கொள்ளையடிக்கும் மர்ம கும்பல்; அதிர்ச்சியில் மக்கள்

உசிலம்பட்டி பகுதியில் வங்கியிலிருந்து பணம், நகைள் எடுப்பவர்களை பின் தொடர்ந்து வந்து நூதன முறையில் கொள்ளையடிக்கும் மர்ம கும்பல் குறித்து இந்த செய்தி தொகுப்பை பார்க்கலாம். 

பொதுமக்களின் பணம் நகைகளை கொள்ளையடிப்பதில் அடுத்தடுத்து நூதன முறைகளை கையாண்டு வருகின்றனர் கொள்ளையர்கள், அந்த வகையில் வங்கியிலிருந்து எடுத்து வரும் பணம் மற்றும் நகைகளை நூதன முறையில் கொள்ளையடிக்கும் கும்பலால் உசிலம்பட்டி பகுதி மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதி விவசாயம் சார்ந்த பகுதியாகவே உள்ளது.
விவசாயத்தில் கிடைக்கும் சிறிதளவு பணத்தையும், நகைகளையும் வங்கியில் சேமித்து
வைக்கும் இப்பகுதி மக்கள். தேவைக்கேற்ப அதை வங்கியிலிருந்து எடுத்து
பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு வங்கியிலிருந்து பணம் மற்றும் நகைகளை எடுத்துக் கொண்டு மஞ்சள் பைகளில் எடுத்து வருவதை நோட்டமிடும் மர்ம கும்பல் வங்கியிலிருந்தே அவர்களை இருசக்கர வாகனம் மற்றும் நடந்தவாரே பின் தொடர்கின்றனர்.


பணம் நகைகளுடன் வீட்டிற்கு செல்லும் பொதுமக்கள் உசிலம்பட்டி பகுதியில் உள்ள
கடைகளில் பொருட்களை வாங்குவதற்காக தங்களது இருசக்கர வாகனத்தில் வைத்துவிட்டு பொருட்களை வாங்கும் போது பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல் எந்த சலனமும் இன்றி எதார்த்தமாக பணம் மற்றும் நகைகளை எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் பறந்து விடுகின்றனர்.


இந்த சம்பவங்கள் உசிலம்பட்டியில் இன்று துவங்கியதில்லை, கடந்த 2021ஆம் ஆண்டு
நவம்பர் மாதம் 18ஆம் தேதி மலைப்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் வீடு
கட்டுமான பணிக்காக வங்கியிலிருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரொக்க பணத்தை எடுத்து
வந்ததை கண்ட மர்ம கும்பல் அவரை பின் தொடர்ந்து அவர் கவணம்பட்டி ரோட்டில் உள்ள
கடையில் பொருட்களை வாங்கி கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் இருந்த 2
லட்சத்து 50 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றனர்., இது குறித்து வழக்கு
பதிவு செய்த போலிசார் குற்றவாளிகளை இன்று வரை கண்டுபிடிக்க முடியாத நிலை
நீடிக்கிறது.

இந்நிலையில் தான் இந்த ஆண்டும் கடந்த நவம்பர் 29ஆம் தேதி நக்கலப்பட்டியைச்
சேர்ந்த வேளாங்கன்னிராஜா என்பவர் வங்கியிலிருந்து அடகு வைக்கப்பட்டிருந்த 2
பவுன் நகையை திருப்பிக் கொண்டு, 1500 ரூபாய் பணத்தையும் எடுத்துக் கொண்டு
இருசக்கர வாகனத்தில் வைத்துவிட்டு கடையில் பொருட்களை வாங்கி கொண்டிருந்த போது 2 பவுன் நகை மற்றும் 1500 ரூபாய் ரொக்கத்தை நூதன முறையில் கொள்ளையடித்து
சென்றனர்.


இதனை தொடர்ந்து அடுத்த இரு தினங்களிலேயே டிசம்பர் 2ஆம் தேதி இதே பாணியில்
கீரிபட்டியைச் சேர்ந்த விமலா என்ற பெண் பசுமாட்டிற்காக கிடைத்த லோன் தொகையான 5 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கத்தை வங்கியிலிருந்து எடுத்து வந்த போது பின் தொடர்ந்து வந்த கும்பல் வண்ணாரப்பேட்டை பகுதியில் கடைக்கு சென்ற போது 5
லட்சத்து 40 ஆயிரம் ரொக்கத்தை நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்டது
குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களின் அடிப்படையில் அந்த அந்த பகுதிகளில்
கிடைத்த சிசிடிவி காட்சிகளை கொண்டு உசிலம்பட்டி டிஎஸ்பி நல்லு தலைமையில்
தனிப்படை அமைத்து நூதன முறையில் கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றி வரும் மர்ம கும்பலை போலிசார் தேடி வருகின்றனர். இருந்த போதும் வங்கியிலிருந்து பணம் நகைகளை எடுத்து வரும் பொதுமக்கள் பத்திரமாக பாதுகாப்புடன் எடுத்து செல்ல போலிசார் அறிவித்திருந்தாலும் பொதுமக்கள் பீதியுடனே வளம் வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வாரிசு VS துணிவு பொங்கல்…ஜெய்லர் VS இந்தியன் 2 தீபாவளி?…

Lakshmanan

பெண் உதவி ஆய்வாளருக்கு, சக காவலர்கள் நடத்திய வளைகாப்பு நிகழ்ச்சி

Web Editor

இணையத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் முக்கிய காட்சிகள்; படக்குழுவினர் அதிர்ச்சி!

Saravana