திருவண்ணாமலை மகா தீபம்: லட்சக் கணக்கில் குவிந்த பக்தர்கள்

திருவண்ணாமலையில் மகா தீபம் இன்று மாலை ஏற்றப்படுவதை முன்னிட்டு அதனைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.  நினைத்தாலே முக்தி தரும் தலம் என்று வர்ணிக்கப்படும் திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீப திருவிழா, கடந்த 27ந் தேதி…

திருவண்ணாமலையில் மகா தீபம் இன்று மாலை ஏற்றப்படுவதை முன்னிட்டு அதனைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். 

நினைத்தாலே முக்தி தரும் தலம் என்று வர்ணிக்கப்படும் திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீப திருவிழா, கடந்த 27ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சிறப்பு அலங்காரங்களுடன் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற்ற நிலையில் அதனை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டுகளித்தனர்.

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவின் சிகர நிகழ்வான மகா தீபம் ஏற்றும் நிகழ்வு இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இதனையொட்டி இன்று அதிகாலை கோயில் வளாகத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலை 6 மணிக்கு ஏற்றப்பட உள்ள மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் தீப கொப்பரைக்கு நேற்று காலை சுமார் 5.30 மணியளவில் 2-ம் பிரகாரத்தில் உள்ள நந்தி சிலை அருகில் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் அந்த கொப்பரை பக்தர்களால் மலைக்கு கொண்டு செல்லப்பட்டது. அத்துடன் 4,500 லிட்டர் நெய், தீபத்திற்கு தேவையான காடா துணிகள் மலைக்கு எடுத்து செல்லப்பட்டன.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் அருகே உள்ள 2,668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்படுவதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர். தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களிலிருந்தும் திரண்டுள்ள பக்தர்களால் திருவண்ணாமலையெங்கும் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளிக்கிறது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கோயில் நிர்வாகம் சார்பிலும், மாவட்ட நிர்வாகம் சார்பிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு போலீசார் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படும் நிகழ்வை மாலை 3 மணி முதல் சிறப்பு பக்தி இன்னிசை நிகழ்ச்சி மற்றும் பக்தி பரவசமூட்டும் வர்ணனையுடன் நியூஸ்7 தமிழ் நேரலை செய்து வருகிறது. இந்த நேரலையை நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி மற்றும் News7 Tamil PRIME,   News7Tamil Bakthi  யூடியூப் சேனல்களிலும்  காணலாம்.

https://www.youtube.com/watch?v=8Hv6tNGIbXs

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.