ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
மும்பையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது.
தொடர்ந்து 159 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணியில் கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்களில் ஆட்டமிழந்தார். சூர்யகுமார், திலக் வர்மா ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனையடுத்து 19.2 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை குவித்தது. இதையடுத்து மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இத்தொடரில் 9 போட்டிகளில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
நேற்றைய தினத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் குஜராத் அணியும் பெங்களூரு அணியும் மோதின. இந்த ஆட்டத்தில், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு பெங்களூர் அணி 170 ரன்களை எடுத்தது.
171 ரன்களை வெற்றி இலக்காக விளையாடிய குஜராத் அணி 19.3 பந்துகளில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது. தொடர் வெற்றிகளை குஜராத் அணி குவித்து வருவதால், இந்த அணியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.








