முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

முல்லைப் பெரியாறு அணை 4-வது முறையாக 142 அடியை எட்டியது

தொடர் கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 4-வது முறையாக 142 அடியை எட்டியது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. தமிழக பொதுப்பணித்துறையின் பராமரிப்பு மற்றும் கட்டுப்பாட்டில் உள்ளது இந்த அணை. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாகத் திகழும் இந்த அணையின் நீர்மட்டத்தை 142அடியாக உயர்த்த, கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து 2014, 2015 மற்றும் 2018 ஆகிய 3 ஆண்டுகளில் அணையின் நீர்மட்டம் 142அடியாக உயர்த்தப்பட்டது.

இதையடுத்து இந்த ஆண்டின் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்ததால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. குறிப்பாக கடந்த அக்டோபர் மாதம் பெய்த கனமழையால் அணையின் நீர்வரத்து கணிசமாக அதிகரித்து நீர் மட்டமும் கிடுகிடுவென உயர்ந்தது.

இதனிடையே கேரளாவைச் சேர்ந்த தனிநபர் தொடர்ந்த வழக்கால் அணையில் ரூல் கர்வ் முறை அமல்படுத்தப்பட்டு நவம்பர் 30ஆம் தேதி 142அடிக்கு தேக்கிக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அணையில் நீர்த்தேக்கிக் கொள்ள சாத்தியக்கூறுகள் இருந்தும் அவ்வப்போதுள்ள மதகுகள் திறக்கப்பட்டு உபரிநீர் கேரளாவிற்கு வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, அணியின் நீர்மட்டம் 142-அடியை எட்டியுள்ளது. இதையடுத்து முல்லை பெரியாறு அணையில் நீரை தேக்கும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

தடுப்பூசி செலுத்திக்கொள்ள உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்!

Gayathri Venkatesan

திமுகவை வீழ்த்த பலமான கூட்டணி தேவை – கரு.நாகராஜன்

Saravana Kumar

நிறம் மாறிவரும் சனி கிரகம்!

எல்.ரேணுகாதேவி