ஒமிக்ரான் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள இரண்டு டோஸ் தடுப்பூசி அவசியம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் துணை இயக்குனர் பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸுக்கு ஒமிக்ரான் என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இது வேகமாக பரவும் தன்மை கொண்டது என்பதாலும் அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என்பதாலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் தமிழகப் பிரிவின் துணை இயக்குநராக பதவி வகிக்கும் பிரதீப் கவுர், மக்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் குழுவிலும் இவர் இடம்பெற்றுள்ளார்.
Lot of panic over #COVID19 variant #Omicron which is spreading fast in parts of South Africa; we need to sustain good epidemiological and genomic surveillance, improve two dose coverage and wear masks 😷. Scientists are rapidly sharing the knowledge & we continue to learn more!
— Prabhdeep Kaur (@kprabhdeep) November 29, 2021
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், வேகமாகப் பரவி வரும் ஒமிக்ரானில் இருந்து காத்துக்கொள்ள மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் இரண்டு டோஸ் தடுப்பூசிகள் செலுத்திக் கொள்வதோடு கட்டாயம் முகக் கவசம் அணிந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளார். ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்துவதற் கான நடவடிக்கைகளில் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.








