இந்தியா செய்திகள் விளையாட்டு

’10 வருஷமா அணியில் ஒரு மாற்றமும் பண்ணலை’ : தோனி பெருமை!

கடந்த 10 வருடங்களாக அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கூறினார்.

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில், டெல்லியில் நேற்று நடந்த 23-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் மோதின. முதலில் ஆடிய ஐதராபாத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர், 55 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 57 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மனிஷ் பாண்டே 46 பந்துகளில் 5 பவுண்டரி ஒரு சிக்சருடன் 61 ரன்கள் விளாசினார். கடைசி கட்டத்தில் களமிறங்கிய வில்லியம்சன் அதிரடியாக ஆடி 10 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

172 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெய்க்ட்வாடும் பாப் டு பிளிஸ்சிஸும் சன் ரைசர்ஸ் பந்துவீச்சாளர்களை பதம் பார்த்தனர். அதிரடியான ஆட்டத்தை வெளிப் படுத்திய ருதுராஜ் 44 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 75 ரன்களும் டு பிளிஸ்சிஸ் 38 பந்துகளில் 6 பவுண்டரி ஒரு சிக்சருடன் 56 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இந்த ஜோடியை சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் பிரித்தார். அடுத்து வந்த மொயீன் அலி 15 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர், ரவீந்திர ஜடேஜாவும் சுரேஷ் ரெய்னாவும் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். சென்னை அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 173 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் சென்னை அணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

போட்டிக்குப் பிறகு பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, ’எங்களின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. அதற்காக பந்துவீச்சு மோசமானதாக இருந்தது என்று அர்த்தமல்ல. இந்த பிட்ச் ஆச்சரியமளிக்கும் வகையில் நன்றாக இருந்தது. பனியின் தாக்கமும் இல்லை என்றதால், தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக செயல் பட்டனர். எங்கள் அணியில் கடந்த 8-10 வருடங்களாக எந்த மாற்றமும் செய்ய வில்லை. எங்கள் அணுகுமுறை வீரர்களுக்கு தெரியும். இதனால், வீரர்களின் பலம் பலவீனம் போன்றவற்றை கணிக்க முடிகிறது. இருந்தாலும் இந்த வருடம் வீரர்கள் அதிக பொறுப்பை ஏற்றுள்ளனர். டிரெஸ்சிங் ரூம் சூழலை ஆரோக்கியமாக வைத்திருப்பதும் முக்கியம். அணியில் இடம் கிடைக்காதாவர்களும் முக்கியமான வர்கள்தான்’என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆண்டாள், ஔவையார் லட்சியத்தால் உத்வேகம் பெற்றுள்ளோம்: பிரதமர் மோடி

எல்.ரேணுகாதேவி

எடப்பாடி : கேட்பாரற்று நின்ற சொகுசு காரால் பரபரப்பு

Web Editor

டி-20 உலகக் கோப்பை: ஆப்கன் வெற்றிபெற இந்திய ரசிகர்கள் பிரார்த்தனை

Halley Karthik