மும்பையில் இருந்து விமானம் மூலம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னைக்கு வந்தடைந்துள்ளன.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஐ நெருங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஏற்கனவே இரவு ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு ஆகியவை அமல்படுத்தப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் தமிழகத்தில் தொற்றை கட்டுபடுத்த தமிழக முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 55 லட்சத்தும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பூசிகள் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் போடப்பட்டு வருகின்றன. முதலில், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு மட்டும் இந்த தடுப்பூசிகள் போடப்பட்டன. அதைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு போடப்பட்டன. இதன் பின்னர், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
பின்னர் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்காக ஆன்லைனில் பதிவு செய்துக்கொள்ளலாம் என தமிழ அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான ஆன்லைனில் பதிவு நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கியது.

இந்நிலையில் தடுப்பூசி செலுத்தி கொள்ள “கோவின்” என்ற இணையத்தளத்தில் அல்லது ஆரோக்ய சேது மற்றும் உமாங் சேது என்ற ஆப்
மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
இதனால் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு பலரும் நள்ளிரவு 12 மணி முதல் முன்பதிவு செய்ய முயன்றுள்ளனர். இந்நிலையில் தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசிகளை விரைவாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என்று பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி இருந்தார்.
இதனைத்தொடர்ந்து, தமிழகத்திற்கு மேலும் 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்தடைந்துள்ளது. மேலும் தடுப்பூசிகள் டிஎம்எஸ் வளாகத்திற்கு உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டது.