முக்கியச் செய்திகள் இந்தியா

மனைவியின் உடலை அடக்கம் செய்ய இடம் தேடி அலைந்த முதியவர்

கொரோனா தொற்று பயத்தால் பெண்ணின் உடலை அடக்கம் செய்ய கிராமத்தினர் மறுத்ததைத்தொடர்ந்து அடக்கம் செய்ய இடம் தேடி அலையும் முதியவரின் புகைப்படம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேசத்தின்,ஜயுன்பூர் மாவட்டத்தில் உள்ள அம்பர்பூர் என்ற பகுதியில் திலக்தரி சிங் என்பவர் வசித்து வருகிறார். 50 வயதாகும் இவரது மனைவி ராஜ்குமாரி வெகு நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த திங்கள்கிழமை இவரது நிலை மேலும் மோசமடைந்தால் உமநாத் சிங் மாவட்ட மருத்துவமனையில் ராஜ்குமாரி அனுமதிக்கப்பட்டார். இவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் உடல்நிலை சீராகாததால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து திலக்தாரி சிங், தனது மனைவியின் உடலோடு ஆம்புலன்ஸில் அம்பர்பூரில் உள்ள அவரது கிராமத்திற்குச் சென்றபோது, உடலை ஆம்புஸிலிருந்து எடுத்துச் செல்ல யாரும் உதவ முன்வரவில்லை. மேலும் அவரது மனைவியின் உடலைக் கிராமத்தில் அடக்கம் செய்வதற்கு மறுப்பு தெரிவித்தனர். மனைவி இழந்த சோகத்தைவிடக் கிராம மக்களின் நடவடிக்கை திலக்தாரி சிங்கிற்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. என்ன செய்வதென்றே தெரியாமல் அவர் பரிதவித்துப்போனார். இதைத்தொடர்ந்து தனது சைக்கிளில் அவரது மனைவியின் உடலை எடுத்துக்கொண்டு பல மணி நேரம் அடக்கம் செய்ய இடம் தேடி அலைந்தார். இறுதியாக ராஜ்குமாரியின் உடல் அழுகத்தொடங்கியது. இதைத்தொடர்ந்து சாலையிலே அவரது மனைவியின் உடலைப் போட்டுவிட்டு, சாலையின் ஓரத்தில் கண்ணீருடன் கையறு நிலையில் அவர் அமர்ந்திருக்கும் புகைப்படம் நமது மனதை உடைக்கிறது. மேலும் அவரது மனைவி கொரோனா தொற்றால்தான் உயிரிழந்துள்ளார் என்பதை மருத்துவமனை இன்னும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் சேவைக் கட்டணம்

இனியனின் சமூகம் சார்ந்த 7 பதில்கள்!

Niruban Chakkaaravarthi

போதுமான தடுப்பூசிகள் இருப்பில் இல்லை : மாநகராட்சி ஆணையர்!

Ezhilarasan