ஜெயரஞ்சனுடன் எம்.பி. கனிமொழி ஆலோசனை

சென்னை எழிலகத்தில், மாநில வளர்ச்சி கொள்கை குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சனை, எம்.பி. கனிமொழி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவை கடந்த மாதம் திருத்தியமைத்து உத்தரவு…

சென்னை எழிலகத்தில், மாநில வளர்ச்சி கொள்கை குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சனை, எம்.பி. கனிமொழி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவை கடந்த மாதம் திருத்தியமைத்து உத்தரவு பிறப்பித்தார்.

அதில் பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் துணைத் தலைவராகவும், பேராசிரியர் ராம. சீனுவாசன் முழுநேர உறுப்பினராகவும், பேராசிரியர்கள் ம. விஜயபாஸ்கர், சுல்தான் அஹ்மத் இஸ்மாயில் உள்ளிட்ட 8 பேர் பகுதி நேர உறுப்பினர்களாகவும் நியமனம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் சென்னை எழிலகத்தில், மாநில வளர்ச்சி கொள்கை குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சனை, நாடாளுமன்ற திமுக உறுப்பினர் கனிமொழி நேரில் சந்தித்தார். பின்னர் மாநில வளர்ச்சி கொள்கை குழுவிடம், தமிழ்நாட்டின் வளர்ச்சி கொள்கை குறித்து கனிமொழி ஆலோசனை நடத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.