கொரோனா தொற்றின் 3-வது அலையிலிருந்து அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3 கோடியை கடந்துள்ள நிலையில், தொற்று பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்திலும், உயிரிழப்பு விகிதத்தில் மூன்றாவது இடத்திலும் உள்ளது. மாநில அளவில் தமிழ்நாடு அதிக அளவு பாதிப்பை எதிர்கொண்டது. இதனையடுத்து கொரோனா விதிமுறைகளை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கொரோனா தொற்றின் 3-வது அலையிலிருந்து அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் முககவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளி பின்பற்றாதவர்கள் மீது அபராதம் விதிக்க நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத மத்திய, மாநில அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு மேற்குறிப்பிட்ட அறிவுரைகளை வழங்கியுள்ளது.