ஈரோட்டில், பெற்ற குழந்தைகளையே நரபலி கொடுக்க முயன்றதாக சிறுவர்கள் அளித்த புகாரின் பேரில் தாய், தந்தை உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி பகுதியை சேர்ந்த ராமலிங்கம் என்பவருக்கு 2 மனைவிகள் உள்ள நிலையில், இருவருக்கும் தலா 2 குழந்தைகள் உள்ளனர். மூத்த மனைவி ரஞ்சிதாவுக்கு தீபக், கிஷாந்த் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், இரண்டாவது மனைவியின் தோழியான தனலட்சுமி என்பவரும், மூத்த மனைவி ரஞ்சிதாவும், சிவனும் சக்தியும் போல இருப்பதாக கூறி இரண்டு குழந்தைகள் கண் முன்பே, இருவருக்கும் ராமலிங்கம் திருமணம் செய்து வைத்துள்ளார்.
மேலும், மனைவி ரஞ்சிதா மற்றும் தனலட்சுமியுடன் சேர்ந்து 2 மகன்களையும் ராமலிங்கம் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனிடையே, மூட நம்பிக்கை காரணமாக மூவரும் சேர்ந்து, சிறுவர்களை நரப்பலி கொடுக்க முயன்றதாக தெரிகிறது. ஆனால், வீட்டில் இருந்து தப்பித்த சிறுவர்கள், தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில், விசாரணை நடத்திய போலீசார், இந்நிலையில் தலைமறைவாக இருந்த ராமலிங்கம், அவரது 2 மனைவிகள், தோழி தனலட்சுமி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.







