மாதம் ரூ.6 லட்சம் வருமானம்; பப்ஜி மதன் குறித்து வெளிவந்த தகவல்கள்!

யூடியூபர் மதன் அவரது யூடியூப் சேனல்களில் பின்தொடர்பவர்கள் மூலமாகவே மாதம் 6 லட்ச ரூபாய் சம்பாதித்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது! இந்தியாவில் தடை செய்யப்பட்ட விளையாட்டான பப்ஜி மூலம், சிறார்களிடம் ஆபாசமாக பேசியதாக பப்ஜி…

யூடியூபர் மதன் அவரது யூடியூப் சேனல்களில் பின்தொடர்பவர்கள் மூலமாகவே மாதம் 6 லட்ச ரூபாய் சம்பாதித்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட விளையாட்டான பப்ஜி மூலம், சிறார்களிடம் ஆபாசமாக பேசியதாக பப்ஜி மதன் எனும் மதன் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்குப்பதிவையடுத்து விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது அவர் ஆஜராகவில்லை. இதனையடுத்து சேலத்தில் உள்ள அவரது மனைவியிடம் தொடங்கிய விசாரணையில் இந்த ஆண்லைன் விளையாட்டில் மனைவியும் பங்கேற்றிருந்தது கண்டறியப்பட்டது. மனைவி மீதும் காவல்துறை வழக்குப்பதிவு செய்து கைது செய்தது.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், மதன் பப்ஜி விளையாட்டுகளை யூடியூபில் பதிவேற்றியதன் மூலம் அதிகரித்த தனது பின்தொடர்பாளர்களால் மாதம் ரூ.6 லட்சம் வரை வருமானம் ஈட்டியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும், மதனின் பின்தொடர்பாளர்கள் 20க்கும் மேற்பட்டோர் மாதம் ரூ.30 ஆயிரம் வரை வருவாய் ஈட்டியதாகவும் தெரியவந்துள்ளது.

மதன் தனது பின்தொடர்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பப்ஜி விளையாட்டை கொரியாவில் தடை செய்யப்பட்ட ஒரு செயலியை கொண்டு இந்தியாவில் விளையாடியுள்ளார் என்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த விளையாட்டுகளை யூடியூபில் பதிவேற்றுவதற்காகவே 3 தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களின் எண்களை பயன்படுத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பப்ஜி விளையாட்டில் மதனுடன் சேர்ந்து ஆபசமாக பேசியதாக அவரது மனைவி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.