“மோடி மீண்டும் பிரதமராகமாட்டார்” – டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்!

“மோடி மீண்டும் பிரதமராக மாட்டார்” என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.  102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல்…

“மோடி மீண்டும் பிரதமராக மாட்டார்” என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.  102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும்,  88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதியும்,  93 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி 3-ம் கட்ட தேர்தலும்,  96 தொகுதிகளுக்கு கடந்த 13ம் தேதி 4ம் கட்ட தேர்தலும், 49 தொகுதிகளில் நேற்று 5ம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்றது.

இதையடுத்து,  6ம் கட்ட வாக்குப்பதிவு மே 25-ஆம் தேதியும்,  7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதியும் நடைபெற உள்ளன.  தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  இன்னும் இரண்டு கட்ட தேர்தல் மட்டுமே உள்ள நிலையில்,  அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள் : பெங்களூரு கஃபே குண்டுவெடிப்பு – கோவையில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை!

இந்நிலையில், மோடி மீண்டும் பிரதமராக மாட்டார் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்  நேரலை காணொளியில் தெரிவித்தார்.  இது தொடர்பாக அவர் கூறியதாவது :

” மக்களவைத் தேர்தலில் I.N.D.I.A. கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். மோடி பிரதமராக மூன்றாவது முறையாக வர மாட்டார்.  ஆம் ஆத்மிக்கு ஆதரவளிப்பவர்கள் பாகிஸ்தானியர்கள் என மத்திய அமைச்சர் அமித் ஷா கூறுவது மிகவும் கண்டனத்துக்குரியது.  டெல்லியில் கடந்த இருமுறையும் 60 இடங்களுக்கு மேல் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது.  எனவே ஆம் ஆத்மிக்கு ஆதரவளித்த அந்த மக்கள் எல்லாம் பாகிஸ்தானியர்களா?

பஞ்சாப்,  ஹரியானா,  கோவா,  உத்தரhdபிரதேச உள்ளிட்ட மாநிலங்களிலும் ஆதரவளித்த மக்கள் பாகிஸ்தானியர்களா? உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேற்று டெல்லி வந்து என்னை கடுமையாக விமர்சனம் செய்த நிலையில்,  அவர் இருக்கும் கட்சியிலே அவருக்கு எதிரானவர்கள் அதிகமானோர் உள்ளனர் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.  வரும் 4ம் தேதி I.N.D.I.A. கூட்டணி மத்தியில் ஆட்சி பிடிக்கும் என்பது உறுதி”

இவ்வாறு டெல்லி முதலமைச்சரும்,  ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.