10 ஆண்டு ஆட்சியில் அதானி நிறுவனத்திற்கு மோடி பல திட்டங்களை வழங்கியுள்ளார் -ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

10 ஆண்டு ஆட்சியில் அதானி நிறுவனத்திற்கு மோடி பல திட்டங்களை வழங்கினார் என ராகுல் காந்தி, குற்றம்சாட்டியுள்ளார்.  கடந்த 10 ஆண்டுகளில் துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் போன்ற பல உள்கட்டமைப்பு…

10 ஆண்டு ஆட்சியில் அதானி நிறுவனத்திற்கு மோடி பல திட்டங்களை வழங்கினார் என ராகுல் காந்தி, குற்றம்சாட்டியுள்ளார். 

கடந்த 10 ஆண்டுகளில் துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் போன்ற பல உள்கட்டமைப்பு திட்டங்கள் அதானிக்கு வழங்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை குற்றம் சாட்டியுள்ளார்.

தெலங்கானாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி இதனைத் தெரிவித்துள்ளார்.  மேலும் நாடு முழுவதும் 20-22 பேருக்கு மட்டுமே பிரதமர் உழைத்து அவர்களை கோடீஸ்வரர்களாக்கியுள்ளார் என்று குற்றம் சாட்டினார்.  இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவர மோடி பல அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்குகிறார் என்று காந்தி ராகுல் குற்றம் சாட்டினார்.

இடஒதுக்கீட்டை நிறுத்த பாஜக விரும்புகிறது. அ தே நேரத்தில் காங்கிரஸ் அதை 50 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரிக்க விரும்புகிறது என்று அவர் கூறினார்.  காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றார்.

மக்களவை தேர்தல் பிரதமர் நரேந்திர மோடியின் கைகளில் இருந்து படிப்படியாக நழுவி வருவதாகவும், இப்போது நாட்டு இளைஞர்களின் கவனத்தை திசை திருப்ப புதிய நாடகத்தை நடத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.