ஜப்பான் நாட்டில் சுமார் 90 லட்சம் வீடுகள் ஆட்களே இல்லாமல் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பானின் மக்கள்தொகை விகிதம் வெகுவாக குறைந்து வருகிறது. ஜப்பான் நாட்டில் மக்கள்தொகை வேகமாக குறைந்து வருவதால் அந்நாடு முழுவதும் சுமார் 90 லட்சம் வீடுகள் ஆட்களே இல்லாமல் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்பு கிராமப் பகுதிகளில் மட்டுமே காணப்பட்ட இந்த நிலை, தற்போது டோக்கியோ, கியோட்டா போன்ற பெருநகரங்களிலும் பரவி வருவதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: விரைவில் பாகுபலி 3… – இயக்குநர் ராஜமெளலி கொடுத்த அப்டேட்!
கைவிடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை பெருகி வருவதற்கு ஜப்பான் நாட்டில் பிறப்பு விகிதம் கணிசமாக குறைந்து வருவதே காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் வீட்டின் உரிமையாளர்கள் தற்காலிகமாக வேலைக்காக வெளிநாடுகளுக்கு இடம் பெயர்வது போன்ற பல்வேறு காரணங்களுக்காக ஆக்கிரமிக்கப்படாமல் இருக்கும் சொத்துக்களும் இதில் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







