முக்கியச் செய்திகள் தமிழகம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மநீம சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்!

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மக்கள் நீதி மையம் துணைத்தலைவர் மௌரியா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

மக்கள் நீதி மையத்தின் நெல்லை மண்டல மாநிலச் செயலாளர் பிரேம்நாத் தலைமையில், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், விறகு அடுப்பில் மண்பானை வைத்து சமையல் செய்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதே போல, தூத்துக்குடியில் மக்கள் நீதிமய்யத்தின் மத்திய மாவட்ட துணைசெயலாளர் ஜவஹர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய ஜவஹர், இது மக்கள் நீதி மய்யத்தின் முதல் கண்டன ஆர்ப்பாட்டம் என்று குறிப்பிட்டார். தொடர்ந்து பல்வேறு மக்கள் பிரச்னைகளுக்காக மக்கள் நீதி மய்யம் குரல் கொடுக்கும் என்றும் உறுதிபடத்தெரிவித்தார்.

சேலத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண்கள் சிலிண்டருக்கு பதிலாக விறகு அடுப்பில் சமையல் செய்வது போல தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். எரிபொருள் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இதே போல, மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியிலும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு அவர்கள் இறுதி ஊர்வலம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின் போது பயன்படுத்திய இருசக்கர வாகனம், சிலிண்டர்கள், விறகு கட்டைகள் மற்றும் விறகடுப்பை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருசக்கர வாகனத்திற்கு ரூபாய் நோட்டு மாலை அணிவித்து மக்கள் நீதி மய்யத்தினர் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விலை உயர்வை குறிக்கும் வகையில் ஏணியை வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். சுதேசி மில் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்தில், எரிபொருள் விலையை குறைக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.

Advertisement:
SHARE

Related posts

அழகர்கோயில் ஆடி திருவிழா – பக்தர்களுக்கு அனுமதி இல்லை

Jeba Arul Robinson

புதுச்சேரியில் ஊரடங்குக்கான அவசியமில்லை – தமிழிசை செளந்தரராஜன்

Gayathri Venkatesan

வடிவேலு பாணியில் வாய்க்காலை காணவில்லை: ஊர் மக்கள் புகார்

Vandhana