ரஜினிகாந்த் நடிக்கும் ’அண்ணாத்த’ படத்தில் விஜய் படத்தின் வில்லன் நடிகர் இணைந்துள்ளார்.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம், ’அண்ணாத்த’. ’சிறுத்தை’ சிவா இயக்கும் இந்தப் படத்தில் ரஜினியுடன், குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைக்கிறார். இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.
இதன் டப்பிங் பணிகள், கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கின. ரஜினிகாந்த் தனது டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாகக் கூறப்பட்டது. இந்தப் படத்தில் பெரும்பாலான காட்சிகளின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. கொல்கத்தாவில் சில காட்சிகள் எடுக்கப்பட இருப்பதாகவும் அங்கு 11 நாட்களுக்கு மேல் ஷூட்டிங் நடக்க இருப்பதாகவும் கூறப் படுகிறது.
https://twitter.com/sunpictures/status/1426415800122892288
இதற்கிடையே இந்தப் படத்தில் புதிதாக, இந்தி நடிகர் அபிமன்யு சிங் இணைந்துள்ளார். இதை சன்பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இவர் வில்லனாக நடிப்பார் என்று தெரிகிறது. அபிமன்யு சிங், தமிழில் விஜய்யின் வேலாயுதம், தலைவா, விக்ரமின் பத்து எண்றதுக்குள்ள ஆகிய படங்களில் நடித்துள்ளார்.








