1567 காவல் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்த ரூ.38.35 கோடி ஒதுக்கீடு – உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்

மதுரை மேலமாசி வீதியைச் சேரந்தவர் கிருஷ்ணன். இவர் கடையை காலி செய்யும் விவகாரம் தொடர்பாக திடீர்நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மிரட்டப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் என்னை மிரட்டியதற்கான ஆதாரங்கள் காவல் நிலைய சிசிடிவியில்…

மதுரை மேலமாசி வீதியைச் சேரந்தவர் கிருஷ்ணன். இவர் கடையை காலி செய்யும் விவகாரம் தொடர்பாக திடீர்நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மிரட்டப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் என்னை மிரட்டியதற்கான ஆதாரங்கள் காவல் நிலைய சிசிடிவியில் பதிவாகியுள்ளது.எனவே, திடீர் நகர் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி பாதுகாக்கவும், இது தொடர்பான வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு முந்தைய விசாரணைக்கு வந்தபோது,  காவல் நிலைய கேமரா பதிவு ஆய்வு செய்யப்பட்ட போது 10.8.2022 முதல் 15.8.2022 வரையிலான பதிவுகள் இல்லை. காவல் நிலைய கேமரா பதிவு வசதியில் 15 நாள் பதிவுகளை மட்டுமே சேமிக்க முடியும் என காவல் ஆய்வாளர் பதில் மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து நீதிபதி உள்துறை கூடுதல் செயலாளர் 6வது எதிர்மனுதாரராக சேர்க்கப்படுவதாக தெரிவித்தார். இதையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காவல் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்துவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு மீண்டும் நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது.சிறப்பு உள்துறை செயலர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:  தமிழ்நாட்டில் உள்ள 1567 காவல் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தவும், சிசிடிவி கேமரா பதிவுகளை அதிகப்படுத்தவும் 38.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக காவல் நிலையங்களில் 1 வருடம் முதல் 18 மாதங்கள் வரையிலான சிசிடிவி கேமரா பதிவுகளை சேமிக்க முடியும்.

அண்மைச் செய்தி : மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக் கூட்டம் – திமுகவின் திட்டம் என்ன?

820 காவல் நிலையங்களில் என்விஆர் வசதிகள் கொண்டு சிசிடிவி கேமராக்கள் மேம்படுத்தப்பட (upgrade) உள்ளது. 251 காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. 496 காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் புதிதாக மாற்றப்பட உள்ளது. பணிகள் இரண்டு வாரத்தில் தொடங்கப்பட உள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி, வழக்கு விசாரணையை மார்ச் 20ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.