தலைமைச் செயலகத்தில் புதுப்பொலிவுடன் முதலமைச்சராக பொறுப்பேற்கும் மு.க.ஸ்டாலினுக்கான அறை தயாராகி வருகிறது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அமோக வெற்றி பெற்றது. மொத்தம் 159 இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க. கூட்டணி, 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியில் அமர இருக்கிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக நாளை பொறுப்பேற்கிறார்.
கிண்டி ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்பு நிகழ்ச்சி நாளை காலை நடைபெறுகிறது. மு.க.ஸ்டாலினை அடுத்து 29 அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்த பதவியேற்பு விழாவுக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவில் சுமார் 200 பேர் மட்டும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
இந்நிலையில் தலைமை செயலகத்தில் முதலமைச்சருக்கான அறை புதுப்பொலி வுடன் தயாராகி வருகிறது. தலைமைச் செயலகம் முழுவதையும் வண்ணம் பூசி அழகுபடுத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
………







