இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 4,12,262 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தொற்று பாதிக்கப்பட்டு கடந்த ஒரே நாளில் 3,980 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2.10 கோடியாக அதிகரித்துள்ளது. இதனையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 2.18 லட்சமாக ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் பேர் தொற்றிலிருந்து 3,29,113 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் இதுவரை 16.25 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 17.28 கோடியாக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் கொரோனாவுக்கு 2.10 கோடி பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். மேலும் நாடில் ஆக்சிஜன் பற்றாகுறையால் கொரோனா நோயாளிகள் பலர் உயிரிழக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.







