ராசிபுரம் அருகே காணாமல் போன பெண்ணை இறந்த நிலையில் எலும்புக்கூடாக போலீசார் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மேற்க்குவலசு பகுதியில் செல்வி (45) வசித்து வருகிறார். இவர் செங்கள் சூளையில் பணி புரிந்து வருகிறார். தற்போது கணவனை பிரிந்து அண்ணண் பழனிச்சாமியுடன் வசித்து வருகிறார். மேலும் செல்விக்கு குடிப்பழக்கம் இருப்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக செல்வி காணாமல் போனதாகவும், ஏதாவது உறவினர் விட்டிற்க்கு சென்றிருக்கலாம் என நினைத்து எந்த நடவடிகையும் எடுக்காமல் இருந்ததாகவும் பழனிச்சாமி தெரிவித்தார்.
இதையடுத்து, மேற்க்குவலசு அருகே உள்ள மதுபானகடையின் பின்புரத்தில் துற்நாற்றம் வீசுவதாக ஆடு மேய்த்தவர்கள் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அங்கிருந்த எலும்புக்கூட்டினை மீட்டு செல்வியின் உடல் என உறுதி செய்தனர். மேலும், மதுபோதையில் யாரேனும் கொலை செய்தார்களா அல்லது வேறுஏதாவது காரணமா என்ற கோணத்தில் வெண்ணந்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







