மஞ்சப்பையை பாராட்டி சைக்கிள் பேரணி!

தமிழக அரசின் மஞ்சப்பை திட்டத்தை வரவேற்று மஞ்சப்பை திட்டத்தை வரவேற்று நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரி மாணவ மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சைக்கிள் பேரணி சென்றனர். மாணவர்களோடு சேர்ந்து நாகை மாவட்ட ஆட்சியரும் 8 கிலோ…

தமிழக அரசின் மஞ்சப்பை திட்டத்தை வரவேற்று மஞ்சப்பை திட்டத்தை வரவேற்று நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரி மாணவ மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சைக்கிள் பேரணி சென்றனர். மாணவர்களோடு சேர்ந்து நாகை மாவட்ட ஆட்சியரும் 8 கிலோ மீட்டர் சைக்கிளில் பயணித்தார்.

பிளாஸ்டிக் பைகள் உபயோகிக்க கூடாது என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த, கடந்த 23ஆம் தேதி மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்த முன்னெடுப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. தற்போது, நாகையில் இந்த திட்டத்தை வரவேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் சைக்கிள் பேரணி நடைபெற்றது. நாகூர் ரவுண்டானாவில் இருந்து இந்த சைக்கிள் பேரணி துவங்கியது. இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற இப்பேரணியை துவக்கி வைத்த ஆட்சியர் தம்புராஜ், அவர்களுடன் இணைந்து 8 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நெகிழி இல்லாத தமிழகத்தை உருவாக்க சைக்கிளில் மஞ்சப்பையை தொங்கவிட்டபடி அனைவரும் இந்த பேரணியை மேற்கொண்டனர். மேலும், பசுமையை மீட்டெடுக்க அனைவரும் மஞ்சப்பை பயன்பாட்டுக்கு திரும்ப வேண்டும் என்றும் மாணவரகள் வலியுறுத்தினார்கள். நாகூரில் தொடங்கிய இந்த பேரணி நாகை புத்தூர் ரவுண்டானாவில் முடிவடைந்தது. தமிழக அரசின் மஞ்சப்பை திட்டத்தை வரவேற்கும் வகையில் சென்ற இந்த 8 கிலோ மீட்டர் தூர சைக்கிள் பேரணி பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.