நாமக்கல்லில் வங்கி பெண் மேலாளர் மர்மமான முறையில் வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டம், கடக்கால் பகுதியைச் சேர்ந்த அஞ்சனா (32), நாமக்கல்லில் உள்ள கனரா வங்கி கிளையில் மேனேஜராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 4 வயதில் ஒரு மகன் உள்ளார். குடும்ப பிரச்சினை காரனமாக அவரது கணவர் அவரை விட்டுப்பிரிந்து அமெரிக்கா சென்றுவிட்டார். வங்கி மேலாளர் அஞ்சனா, நாமக்கல் மோகனூர் சாலை தீரன் நகரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஓனம் பண்டிகைக்காக கேரளாவில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்ற அஞ்சனா திங்கள்கிழமை நாமக்கல் திரும்பி வந்துள்ளார். இந்நிலையில் வங்கி பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அஞ்சனாவின் பெற்றோர் பல முறை செல்போன் மூலம் அவரை தொடர்பு கொள்ள முயற்சி செய்தபோது அவர் போன் எடுக்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அவர் வங்கியில் அவருடன் பணிபுரியும் அலுவலர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதன் பின் அஞ்சனா வீட்டிற்கு சென்ற அலுவலர்கள் கதவு உள்பக்கமாக சாத்தப்பட்டிருந்ததை அடுத்து போலீசாரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அஞ்சனா வீட்டிற்குள் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து அவரது சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதணைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அஞ்சானவின் உயிரீழிப்புக்கான காரணம் குறித்து அவர் வேலை பார்த்து வந்த வங்கியின் சக அலுவலர்கள் மற்றும் பெற்றோரிடம் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். போலீசாரின் முழு விசாரணைக்கு பிறகே உயிரீழிப்புக்கான காரணம் குறித்து தெரியவரும் என்கின்றனர் போலீசார்.