வேட்புமனுவில் தவறான தகவல் : இபிஎஸ் மீது வழக்குப் பதிவு

தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்தது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட பழனிச்சாமியின் வேட்பு மனு மற்றும் பிரமாண…

தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்தது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

2021 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட பழனிச்சாமியின் வேட்பு மனு மற்றும் பிரமாண பத்திரத்தில் சொத்து விவரம் உட்பட பல்வேறு முக்கிய தகவல்களை தவறாக தெரிவித்துள்ளதால் அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தேனி உத்தமபாளையத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் சேலம் நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யும்படியும் சேலம் குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த  உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும், உத்தரவை ரத்து செய்யக் கோரியும் எடப்பாடி பழனிச்சாமி வழக்கு தொடர்ந்தார்.

இந்த நிலையில் தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்தது தொடர்பாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சேலம் மத்திய குற்றப்பிரிவு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறையின் விளக்கத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணை ஜூன் 6க்கு நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. மேலும்  அதுவரை இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாமென காவல்துறைக்கு  நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.