NCL 2023 : அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி மதர் தெரசா பொறியியல் கல்லூரி அசத்தல்!

திருநெல்வேலி மண்டலத்தை சேர்ந்த மதர் தெரசா பொறியியல் கல்லூரி,  பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியை வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.  நியூஸ்7 தமிழ் மற்றும் நியூஸ்7 தமிழ் ஸ்போர்ட்ஸ் இணைந்து மாபெரும் டி20 கிரிக்கெட்…

திருநெல்வேலி மண்டலத்தை சேர்ந்த மதர் தெரசா பொறியியல் கல்லூரி,  பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியை வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. 

நியூஸ்7 தமிழ் மற்றும் நியூஸ்7 தமிழ் ஸ்போர்ட்ஸ் இணைந்து மாபெரும் டி20 கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. இந்த தொடரில் 4 மண்டலங்களில் இருந்து தலா 8 அணிகள் வீதம், 32 அணிகள் கலந்து கொண்டன. லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில், இன்றும் நாளையும் காலிறுதிப் போட்டிகள் நடைபெறுகின்றன.

இநிலையில் இன்று நடைபெற்ற இரண்டாவது காலிறுதி போட்டியில், திருநெல்வேலி மண்டலத்தை சேர்ந்த மதர் தெரசா பொறியியல் கல்லூரி மற்றும் பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி அணிகள் மோதின. டாஸ் வென்று பிரான்சிஸ் சேவியர் கல்லூரி அணி பந்துவீச்சு தேர்வு செய்து மதர் தெரசா கல்லூரி முதலில் பேட் செய்ய அழைத்தது.

முதலில் பேட் செய்த பிரான்சிஸ் சேவியர் கல்லூரி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் எடுத்தது, மதர் தெரசா கல்லூரிக்கு 135 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது

அதன் பின் களமிறங்கிய மதர் தெரசா கல்லூரி, கடைசி ஓவரில் 19.2 ஆவது ஓவரில் இலக்கை எட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய ரோலண்ட் வீனஸ் 24 பந்துகளில் 36 ரன்கள் விளாசினார். இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுகள் மற்றும் பேட்டிங்கில் 36 ரன்கள் விளாசியதன் மூலம் ரோலண்ட் வீனஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.