“வருடத்திற்கு ஆறு சமையல் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும்”: அமைச்சர் சரோஜா

அதிமுக ஆட்சி அமைந்ததும் வருடத்திற்கு ஆறு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என ராசிபுரம் தொகுதி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான சரோஜா உறுதியளித்தார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு…

அதிமுக ஆட்சி அமைந்ததும் வருடத்திற்கு ஆறு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என ராசிபுரம் தொகுதி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான சரோஜா உறுதியளித்தார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சரோஜாவுக்கு, அந்தப் பகுதியினர் உற்சாக வரவேற்பளித்தனர். ராசிபுரம் நகர் பகுதியில் கூடியிருந்த வாக்காளர்களிடையே அவர் பேசும்போது, அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள நலத்திட்டங்களை எடுத்துக் கூறினார். அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்ததும் குடும்பத்திற்கு 6 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படும் என சரோஜா உறுதி அளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.