பி.இ.எஸ்.பி தலைவராக மல்லிகா சீனிவாசன் நியமனம்!

பி.இ.எஸ்.பி தலைவராக தனியார் துறையை சேர்ந்த மல்லிகா சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவன தேர்வு வாரியத்தின் தலைவராக தனியார் துறையை சேர்ந்த மல்லிகா ஸ்ரீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், டி.வி.எஸ் மோட்டார் நிறுவனத்தின்…

பி.இ.எஸ்.பி தலைவராக தனியார் துறையை சேர்ந்த மல்லிகா சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவன தேர்வு வாரியத்தின் தலைவராக தனியார் துறையை சேர்ந்த மல்லிகா ஸ்ரீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், டி.வி.எஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசனின் மனைவியாவார். மேலும் இவர், தமிழகத்தை சேர்ந்த தனியார் நிர்வாகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ளார்.

இவருடைய பணி நியமனத்துக்கு மத்திய பணியாளர் நியமனக்குழு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், இவ்வாறு நியமித்தது இதுவே முதல் முறையாகும். அரசு அளித்த உத்தரவின்படி, மல்லிகா சீனிவாசன் பதவி பொறுப்பேற்ற நாளிலிருந்து 3 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை பதவி காலம் இருக்கும் என தெரிவித்துள்ளது. இதனையடுத்து, மத்திய அரசின் பொதுத்துறை வாரியத்தின் உறுப்பினராக 1985-ம் ஆண்டு பிரிவை சேர்ந்த IAS சைலேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.