இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்று தந்த மீராபாய் சானுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மகளிர் 49 கிலோ பளு தூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதகக்கம் வென்றுள்ளார். காலை 10.30 மணிக்கு மகளிர் 49 கிலோ பிரிவுக்கான போட்டிகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மீராபாய் சானு 84 மற்றும் 87 கிலோ எடையை முதலில் தூக்கினார். தொடர்ந்து 89 கிலோ எடையை தூக்க அவர் முயற்சித்தபோது, அவரால் முடியவில்லை. இதைத்தொடர்ந்து அவர் 115 கிலோ எடையை அவர் தூக்கி இரண்டாவது இடத்தை பிடித்தார்.
https://twitter.com/narendramodi/status/1418823182702694400
இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பாராட்டும் வகையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘ஒலிம்பிக் போட்டிகளுக்கு இதுபோல ஒரு நல்ல ஆரம்பம் அமையுமா? என்று தெரியவில்லை. வெள்ளிப்பதக்கத்தை வென்ற அவருக்கு எனது பாராட்டுகள். அவரது வெற்றி ஒவ்வொரு இந்தியனை உத்வேகப்படுத்துகிறது.’ என்று
தெரிவித்துள்ளார்.
https://twitter.com/mkstalin/status/1418828703480565769
மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த வாழ்த்துச் செய்தியில்,’முதல் நாள் ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவின் வெற்றி ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கிறது. வெள்ளிப்பதக்கத்தை வென்ற அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்’என்று பதிவிட்டுள்ளார்.







