இலங்கை அகதிகளுக்கு வீடுகள் கட்டித் தரப்படும்: அமைச்சர் செஞ்சி மஸ்தான்

தமிழ்நாட்டில் முகாம்களில் உள்ள இலங்கை அகதிகளுக்கு புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். மதுரை சாத்தமங்கலம் சிறுபான்மையினர் மாணவி விடுதியில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை…

தமிழ்நாட்டில் முகாம்களில் உள்ள இலங்கை அகதிகளுக்கு புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

மதுரை சாத்தமங்கலம் சிறுபான்மையினர் மாணவி விடுதியில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த, இரண்டு மாதங்களில் வெளிநாடுகளில் உயிரிழந்த 32 தமிழர்களில், 30 பேரின் உடல்கள் தமிழ்நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவித்தார். தற்போது 13 ஆயிரத்து 553 இலங்கை அகதிகள் குடும்பங்கள், முகாமிற்கு வெளியே வசித்து வருவதாகவும், அவர்களுக்கு சட்ட ரீதியாக இந்திய குடியுரிமை பெற்று தர அரசின் சார்பில் சிறப்பு குழு அமைக்கப்படும்” எனக் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.