முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகாரில் மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா கைது

சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட புகாரில் தேடப்பட்டுவந்த மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா மதுரையில் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கடந்த 18 ஆம் தேதி நடைபெற்ற சிறுபான்மையினர் உரிமை மீட்பு குறித்த ஆர்ப்பாட்டத்தில், இந்து கடவுள்கள், பிரதமர் உள்ளிட்டோரை மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா விமர்சித்துப் பேசியதாக கூறப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கள்ளிக்குடி காவல் நிலையம்

இதுகுறித்து அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டு, தேடப்பட்டு வந்ததால் தலைமறைவானதாக தெரிகிறது. இந்நிலையில், கன்னியாகுமரியிலிருந்து காரில் சென்னைக்கு சென்ற மதபோதகர் ஜார்ஜ் பொன்னையாவை மதுரை கருப்பாயூரணி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த காவல்துறையினர் கைது செய்தனர்.

இதனையடுத்து கள்ளிக்குடி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்திய நிலையில், அங்கு வந்த கன்னியாகுமரி காவல்துறையினர் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கொரோனா தடுப்பூசி போடுவதில் காட்டும் தயக்கம் எவ்வளவு தீவிரமானது?

EZHILARASAN D

பிளஸ்2 தேர்வுக்கு பயந்து மாணவன் தீக்குளித்து தற்கொலை

Halley Karthik

தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை; வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி

G SaravanaKumar