உதகையில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 2.3 டிகிரி செல்சியசும், அவலாஞ்சியில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 1 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளதால் உதகை மினி காஷ்மீர் போல் காட்சியளிக்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் உறை பனிப்பொழிவின் தாக்கம் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு உறை பனியின் தாக்கம் தாமதமாக துவங்கி கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் உறை பனி நிலவி வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால் மாலை 3 மணி முதல் அதிகாலை 9:00 மணி வரை கடும் குளிர் நிலவி வருகிறது. இரவு நேரங்களில் நிலவும் கடும் உறை பனிப்பொழிவு காரணமாக அதிகாலை பச்சை புல்வெளிகள் மீது உறை பனி படர்ந்து காணப்பட்டும் கடும் குளிர் நிலவு வருகிறது.
இந்நிலையில் உதகை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கடும் உறை பனிப்பொழிவு நிலை வரும் நிலையில் இன்று அதிகாலை உதகை அருகே அமைந்துள்ள சூழல் சுற்றுலா மையமாக இயங்கி வரும் அவலாஞ்சியில் உறை பனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு பச்சை புல்வெளிகள் மீது உரைப்பனி படர்ந்து காணப்பட்டது.
அதேபோல் அவலாஞ்சி அணை நீர் நிலையின் மீது, உறை பனிப்பொழிவு தாக்கத்தின் காரணமாக அதிகாலை நீராவி வெளியேறி அணை ரம்மியமாக காட்சி அளித்தது. கடந்த ஒரு வாரமாக அவலாஞ்சி பகுதியில் உறை பனிப்பொழிவின் தாக்கம் காணப்பட்டு வரும் நிலையில் இன்று குறைந்தபட்சமாக 1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
மேலும் இன்று அதிகாலை நிலவிய கடும் உறைப் பனிப்பொழிவின் காரணமாக அவலாஞ்சி பகுதி மினி காஷ்மீர் போல் காட்சியளித்து.