வைகை அணை நீர்மட்டம் உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி

ஆண்டிபட்டி வைகை அணை நீர்மட்டம்  உயர்ந்து வருவதால்  விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகைஅணை தேனி திண்டுக்கல் மதுரை சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய ஐந்து தென் மாவட்டங்களின் குடிநீருக்கும் பாசனத்திற்கும்…

ஆண்டிபட்டி வைகை அணை நீர்மட்டம்  உயர்ந்து வருவதால்  விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகைஅணை தேனி திண்டுக்கல் மதுரை
சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய ஐந்து தென் மாவட்டங்களின் குடிநீருக்கும்
பாசனத்திற்கும் ஆதாரமாக விளங்கி வருகிறது.

கடந்த மாதத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் தொடர்ச்சியாக திறக்கப்பட்டதால் முழு கொள்ளளவான 71 அடிவரை நிரம்பி இருந்த வைகை அணையின் நீர்மட்டம் 50 அடியாக குறைந்தது.

இந்நிலையில் பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு தண்ணீர்
திறக்கப்பட்டுள்ளதால் வைகைஅணையின் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து வருகிறது .
71 அடி உயரமுள்ள வைகைஅணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 51.48 அடியாக உயர்ந்துள்ளது .

நீர் வெளியேற்றத்தை விட நீர்வரத்து அதிகமாக உள்ளதால் நேற்று 51 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று அரை அடி உயர்ந்து 51.48 அடியாக உயர்ந்துள்ளது . அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1581 கனஅடியாகவும், நீர் வெளியேற்றம் வினாடிக்கு 969 கனஅடியாகவும் உள்ளது . நீர்இருப்பு 2191 மில்லியன் கனஅடியாக உள்ளது . வைகைஅணை நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து வருவதையடுத்து வைகைப்பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.