மலை கிராமங்களுக்கும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என, அமைச்சர் கே.பி.அன்பழகன் தேர்தல் பரப்புரையில் குறிப்பிட்டார்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில், அதிமுக சார்பில் கேபி அன்பழகன் பாறைகொட்டாய், குண்டாங்காடு, கொத்தலம், கதிரம்பட்டி, மாரவாடி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிக்க சென்ற அவரை ஆரத்தி எடுத்தும், பட்டாசு வெடித்தும் பொதுமக்கள் வரவேற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது பேசிய அவர், தொகுதியிலுள்ள மலை கிராமங்களுக்கும், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் விநியோகம், தரமான சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை, அதிமுக அரசு செய்து வருவதாக தெரிவித்தார். மேலும், அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை எடுத்து கூறி கே.பி.அன்பழகன் வாக்கு சேகரித்தார்.