இந்தியாவில் ஒரே நாளில் 81, 466 பேர் புதிதாக கொரோனா பாதிப்பு: புனேவில் நாளை முதல் 12 மணி நேர ஊரடங்கு

இந்தியாவில் இன்று ஒரே நாளில் 81, 466 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவிற்கு கொரோனா பாதித்தோறின் எண்ணிக்கை இன்று உச்சத்தை அடைந்திருக்கிறது. 2019 ஆம் ஆண்டு…

இந்தியாவில் இன்று ஒரே நாளில் 81, 466 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவிற்கு கொரோனா பாதித்தோறின் எண்ணிக்கை இன்று உச்சத்தை அடைந்திருக்கிறது.

2019 ஆம் ஆண்டு சினாவிலிருந்து பரவத்தொடங்கிய கொரோனா, உலக முழுவதும் பரவியது. உலக முழுவதிலும் தற்போது 12,95,91,761 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 28,27,321 பேர் கொரோனாவால் உயிரிந்துள்ளனர். இந்தியாவில் மட்டும் 1, 23, 03, 131 பேர் கொரோனாவல் பாதிக்கப்பட்டுள்ளனர். 1, 63,396 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 81, 466 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

மாநில அளவில் மகாராஷ்டிராவில்தான் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதுவரை 28,56,163 பேர் மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 54,898 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த மகாராஷ்டிராவில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நாளை முதல் 12 மணி நேரத்திற்கு ஊரடங்கு அறிவிக்கப்படும் என்று புனே காவல்துறை ஆணையனர் சவுரப் ராவ் தெரிவித்துள்ளார். நாளை மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை பொதுமுடக்கம் அமலுக்கு வருகிறது என்றும் அவர் கூறினார். அடுத்த ஏழு நாட்களுக்கு புனேவில் உள்ள வழிப்பாட்டுத்தளங்கள் மூடப்படும் என்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு அனுமதியில்லை என்றும் அவர் தெரிவித்தார். திருமணம் மற்றும் இறப்பு போன்ற நிகழ்வுகளில் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் உணவகங்கள் , மதுபானக்கடைகள் அனைத்தும் 7 நாட்களுக்கு மூடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.