ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

ஜம்மு-காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் ககபோரா பகுதியில் பாதுகாப்பு படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது…

ஜம்மு-காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் ககபோரா பகுதியில் பாதுகாப்பு படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நிகழ்த்தினர். இதையடுத்து பாதுகாப்பு படையினரும் எதிர்த்தாக்குதல் நடத்த தொடங்கினர். அத்துடன் அந்த இடத்துக்கு கூடுதலான படைகள் வரவழைக்கப்பட்டனர்.

இதைதொடர்ந்து தீவிரவாதிகள் இருந்த பகுதியை பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்திகொண்டே முன்னேறி தங்களது கட்டுக்குள் கொண்டுவந்தனர். இறுதியில் அவர்கள் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். முன்னதாக நேற்று நவ்காம் பகுதியில் பாஜக தலைவர் வீட்டின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது போலீசார் ஒருவர் வீரமரணம் அடைந்தார். இந்நிலையில், இன்று கொல்லபட்ட தீவிரவாதிகள்தான் நேற்று பாஜக தலைவர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியவர்களாக இருக்கலாம் என போலீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.