பொதிகை அதிவிரைவு ரயிலில் செய்யப்பட்ட சிறிய மாற்றம் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

பொதிகை அதிவிரைவு ரயிலில் செய்யப்பட்ட சிறிய மாற்றத்தை ரத்து செய்து ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், செங்கோட்டையிலிருந்து சென்னை எழும்பூர் வரை இரு மார்க்கமாகவும் இயக்கப்பட்டு வரும் பொதிகை அதிவிரைவு ரயிலில் வருகின்ற ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் முன்பதிவு பெட்டிகள் ஒன்று குறைக்கப்பட்டது.

அதற்கு பதிலாக கூடுதலாக ஒரு மூன்றாம் வகுப்பு குளிர்சாதன பெட்டி இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது. இதற்கு பயணிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பானது ரத்து செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, பொதிகை அதிவிரைவு ரயிலில் முன்பு இருந்தது போல 8 முன்பதிவு பெட்டிகளோடு வழக்கம் போல் இயங்கும் எனவும், முன்பு அறிவிக்கப்பட்டிருந்த அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாகவும் தற்போது மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.