ஈ சாலா கப் நமதே – பெங்களூரு அணிக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வாழ்த்து!

ஐபிஎல் போட்டியில் வரலாற்று வெற்றி பெற்ற பெங்களூரு அணிக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி நேற்று (ஜுன்.03) அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களல் 9 விக்கெட்டை இழந்து 190 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து 191 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 184 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 6 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி திரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்தநிலையில் கோப்பையை கைப்பற்றிய பெங்களூரு அணிக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

“ஐபிஎல் போட்டியில் வரலாற்று வெற்றி பெற்ற பெங்களூரு அணிக்கு வாழ்த்துகள். கனவு கடைசியில் நனவாகி உள்ளது. ஈ சாலா கப் நமதே! மின்சாரம் போன்ற செயல்பாடு முதல், கலங்காத மனவுறுதி வரை, இந்த வெற்றியானது, கர்நாடகாவின் பெருமையை கொழுந்து விட்டு எரிய செய்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை திகிலடைய செய்துள்ளது” என பதிவிட்டு உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.