நடிகர் சூர்யா- ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் வெளியாகியுள்ள புதிய திரைப்படம் ’கருப்பு’. டிரீம் வாரியர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் திரிஷா, இந்திரன்ஸ், சுவாசிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
கருப்பு திரைப்படம் மே 14 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் திரைப்படம் அன்று வெளியாக வில்லை. தொடர்ந்து கருப்பு திரைப்படம் மே 15 ஆம் தேதி வெளியானது.
ஆக்ஷன், மாஸ், எமோஷனல் படமாக வெளியாகியுள்ள கருப்பு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நீண்ட நாள்களாக தியேட்டிரிக்கல் ஹிட்டுக்காக போராடி வரும் சூர்யாவுக்கு கருப்பு பெரும் வெற்றி படமாக அமைந்துள்ளதாக அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜிக்கும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது.
விமர்சனங்கள் நல்ல படியாக வந்து கொண்டிருக்கும் சூழலில் கருப்பு திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அதன் படி கருப்பு திரைப்படம் வெளியாகிய இரண்டு நாட்களில் உலக அளவில் 65 கோடிக்கு அதிகமாக வசூலித்ததாக கூறப்படுகிறது. ஆனால் படக்குழு தரப்பில் இன்னும் அதிகார்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. படத்திற்கான முன்பதிவுகளும் அதிகரித்த வண்ணம் இருப்பதால் வசூல் மேலும் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.







