அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் – தமிழ்நாடு அரசு ஆணை!

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும். பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும். இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசரகால பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும். அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை சார்ந்த திட்டப் பலன்களும் பொதுமக்களுக்கு விரைவாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு சீரிய நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. இயற்கைச் சீற்றம். நோய்த்தொற்று மற்றும் பல்வேறு இடர்பாடான சூழ்நிலைகளில், இந்தத் திட்டப் பணிகளை மாவட்ட அளவில் கூர்ந்தாய்வு செய்து, விரைவுபடுத்தும் வகையில் ஏற்கனவே இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கண்காணிப்பு அலுவலர்களாக (Monitoring Officers) நியமித்து அரசு கண்காணித்து வருகிறது. இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில், அமைச்சர் பெருமக்களையும் இப்பணியில் முழுமையாக ஈடுபடுத்த அரசு முடிவெடுத்துள்ளது.

அதன்படி, அமைச்சர் பெருமக்களை. அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்து, அந்தந்த மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும். இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசரகால பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும். வருவாய் மாவட்ட வாரியாக, அமைச்சர்களை பொறுப்பு அமைச்சர்களாக பின்வருமாறு நியமனம் செய்யப்படுகின்றனர்.

விழுப்புரம், கடலூர் – ஆனந்த்
சென்னை, திருவண்ணாமலை – ஆதவ் அர்ஜுனா
மயிலாடுதுறை வெங்கட்ரமணன்
திருவள்ளூர் – ரா.குமார்
நெல்லை – மரிய வில்சன்
பெரம்பலூர் -ராஜ்மோகன்
காஞ்சிபுரம் – க.தென்னரசு
திருப்பத்தூர் – ரஞ்சித்குமார்
செங்கல்பட்டு -சரத்குமார்
கள்ளக்குறிச்சி – வன்னி அரசு
ராணிப்பேட்டை – காந்திராஜ்
தருமபுரி, அரியலூர் – ராஜ்குமார்
நாகை ஷாஜகான்
தஞ்சாவூர் – வினோத்
திருச்சி – ரமேஷ்
கரூர் – விஜயலஷ்மி
நாமக்கல் – லோகேஷ் தமிழ்செல்வன்
திருப்பூர் – அருண்ராஜ்
நீலகிரி -கமலி
வேலூர் – விஜய் பாலாஜி
ஈரோடு செங்கோட்டையன்
கோவை சம்பத்குமார்
மதுரை, தேனி – நிர்மல்குமார்
புதுக்கோட்டை – முகமது பர்வேஸ்
சிவகங்கை டி.கே.பிரவு
கிருஷ்ணகிரி – கீர்த்தனா
விருதுநகர் – ஜெகதீஸ்வரி
திருவாரூர் – விஸ்வநாதன்
தூத்துக்குடி – ஸ்ரீநாத்
ராமநாதபுரம் -மதன்ராஜா
சேலம் – பார்த்திபன்
கன்னியாகுமரி -ராஜேஷ்குமார்
தென்காசி – ராஜீவ்
திண்டுக்கல் – விக்னேஷ்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.