கார்நாடக மாநில முதலமைச்சராக பதவி வகித்த சித்தராமையா கடந்த மாதம் 28 ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் துணை முதலமைச்சராக இருந்த டிகே. சிவகுமார் கர்நாடக காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து கர்நாடக முதலமைச்சராக பதவியேற்க டி.கே.சிவக்குமாருக்கு அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில் கர்நாடக மாநில முதலமைச்சராக டி.கே. சிவகுமார் இன்று பதவியேற்றார். பெங்களூருவில் உள்ள லோக் பவனின் கண்ணாடி மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மேலும் கர்நாடக துணை முதலமைச்சராக ஜி. பரமேஸ்வர் பதவியேற்றார்.
இந்த நிகழ்வில், கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.







