பிரதமர் மோடியுடன் நேபாள ஆர்.எஸ்.பி தலைவர் ரவி லாமிச்சானே சந்திப்பு…!

இந்திய பிரதமர் மோடியை நேபாளம் நாட்டின் ஆளுகட்சியான ஆர்.எஸ்.பி தலைவர் ரவி லாமிச்சானே சந்தித்துள்ளார்.

நேபாளத்தில் ஆளும் கட்சியான ராஷ்ட்ரிய சுதந்திர கட்சியின் (RSP) தலைவர் ரபி லாமிச்சானே இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கோண்டுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின் போது அவர் பல மூத்த இந்தியத் தலைவர்களை சந்தித்தார்.

இந்த நிலையில் ரபி லாமிச்சானே, இந்திய பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். புது டெல்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் மற்றும் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இது தொடர்பாக இந்திய பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நேபாளத்தின் ‘ராஷ்டிரிய ஸ்வதந்திர கட்சி’யின் தலைவர் திரு. ரவி லாமிச்சானே அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு பொதுவான மற்றும் வளமான எதிர்காலத்திற்காக இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற உங்கள் விருப்பத்தை நான் வரவேற்கிறேன்; மேலும், அவ்விஷயத்தில் நான் முழுமையாக உடன்படுகிறேன்.

எங்களின் ‘அண்டை நாடுகளுக்கே முன்னுரிமை’ (Neighborhood First) கொள்கையின் கீழ், நேபாளம் ஒரு முன்னுரிமைக்குரிய கூட்டாளியாகத் திகழ்கிறது. எங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான தனித்துவமான மற்றும் பன்முகத்தன்மை வாய்ந்த உறவை புதிய உயரங்களுக்குக் கொண்டுசெல்லும் வகையில், புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற நாங்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.